“யாழ்ப்பாண கல்வியலாளர் ஒன்றியம்” அமைப்பு யாழ்.பல்கலையில் இல்லை -அறிக்கைக்கும் எமக்கும் தொடர்பில்லை: யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம்-

ஆசிரியர் - Editor I
“யாழ்ப்பாண கல்வியலாளர் ஒன்றியம்” அமைப்பு யாழ்.பல்கலையில் இல்லை -அறிக்கைக்கும் எமக்கும் தொடர்பில்லை: யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம்-


யாழ்ப்பாண கல்வியலாளர் ஒன்றியம் என்ற பெயரில் பத்திரிகை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை வெளிவந்த அறிக்கைக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை. அவ்வாறான எந்தவொரு அமைப்பும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இல்லை.

இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. 

இவ்வாறான அறிக்கைகள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சமூகப் பொறுப்பின் அடிப்படையில் இதனை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இந்த அறிக்கையில் கையெப்பமிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு