வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபர் மீண்டும் சிறையில்

ஆசிரியர் - Admin
வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபர் மீண்டும் சிறையில்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக குற்றசாட்டப்பட்டு  ரயலட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட பின்னர் பொலிஸார் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்தும் விறக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரது விளக்கமறியாலனது எதிர்வரும் 21ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கனாது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.


குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து தெளிவான அறிக்கை கிடைக்கவில்லை என பொலிஸார் மன்றுக்கு தெரிவித்தனர். இதனையடுத்தே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


இதேவேளை குறித்த நபர்இ அம் மாணவியின் பாலியல் வல்லுறவு படுகொலை தொடர்பான வழக்கானது ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெறும்போது ஒருமுறை வழக்கு விசாரனை நிறைவடைந்து செல்லும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது பெயரினை கூறி அவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.


இதனையடுத்தே குறித்த நபருக்கு எதிராக சாட்சிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் பிறிதொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த்து.


இந்நிலையில் குறித்த நபர் வித்தியா கொலை வழக்கில் இவர் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட போதும் பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கிலேயே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு