தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது! - விக்னேஸ்வரன்

ஆசிரியர் - Admin
தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது! - விக்னேஸ்வரன்

வடமாகாணசபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவைக் கூட வலியுறுத்த எமது தலைவர்களுக்குத் திராணி இருக்கவில்லை போன்றே தோன்றுகின்றது என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு தடவை முதலமைச்சரிடம் கேள்விகள் முன்வைக்கப்படும். இவ்வாரம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு நீண்டதொரு பதிலைக் கொடுத்திருக்கிறார் முதல்வர்.


கேள்வி -நீங்கள் ஜனாதிபதியுடனும் வேறு சில மத்திய அமைச்சர்களுடனும் சிங்களத்தில் மிக அன்னியோன்யமாக சிரித்துப் பேசுவதைக் கண்டிருக்கின்றோம். ஆனால் உங்கள் அரசியல் கருத்துக்கள் மிகத் தீவிரமாக இருக்கின்றனவே? இது ஒரு நாடகமா?


பதில் - நான்கு விடயங்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். சிங்களத்தில் பேசுவது, சிரித்துப் பேசுவது, என் அரசியல் சிந்தனைகள் தீவிரம் பெற்றுள்ளமை மற்றும் இவை முரண்படுந் தன்மையுடையதால் (நீங்கள் மக்களிடம் எதையோ பெற) நாடகம் ஆடுகின்றீர்களா என்பனவாவன அவை. அவற்றைத் தனித்தனியே பரிசீலிப்போம்.


1. சிங்களத்தில் பேசுவது-


ஜனாதிபதியுடனும் சில மத்திய அமைச்சர்களுடனும் சிங்களத்தில் பேசுகின்றேன் என்றால் என் கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் அவர்களுடன் பேசுவது அவசியம் என்பதால். ஆனால் பிரதம மந்திரியுடன் நான் சிங்களத்தில் பேசுவதில்லை. ஆங்கிலத்திலேயே பேசுவேன்.


அதே போல் எமது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனோ எனது மாணவர் சுமந்திரனுடனோ அல்லது எமது அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடனோ எதிர்க் கட்சித் தலைவர் தவராசாவுடனோ பெருமளவில் ஆங்கிலத்தில்தான் சம்பாஷிப்பேன். தமிழிலும் பேசுவேன்.


அவரவர்கள் எந்த மொழியில் இலேசாகக் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள் என்பதை ஊகித்தறிந்து அந்த மொழியில் பேசுவேன். ஒரு சிங்களவருடன் சிங்களத்தில் பேசுவது பிழையென்று எனக்குப் படவில்லை. ஆங்கிலத்தில் படித்தவர்கள் தமக்குள் ஆங்கிலத்தில் பேசுவதும் பிழையென்றுபடவில்லை.


ஆனால் தமிழில் தமிழன்பர்களுடன் பேசுவதை நான் விரும்புகின்றேன், வரவேற்கின்றேன். மனதின் வாகனம் மொழி. எவரெவருடன் எந்த மொழியில் பேசினால் அங்கு அன்னியோன்யம் மேலோங்குமோ அந்த மொழியை நாடுவது குற்றமாக நான் கருதவில்லை.


2.சிரித்துப் பேசுதல்-


ஒரு சிங்களத் தலைவருடன் எவ்வாறு நீங்கள் சிரித்துப் பேச முடியும் என்று கேட்பது போல் இருக்கின்றது. இங்கு நான் என்னைப் பற்றிக் கூறுவது அவசியமாகின்றது. உங்களுள் பலர் வெறுப்பின் அடிப்படையிலேயே வாழ்க்கையை, வேற்று இன மக்களைப் பார்த்தவர்கள், பார்ப்பவர்கள். நான் சமய சார்பான வாழ்க்கையில் வளர்ந்தவன்.


முதலில் 1957ம் ஆண்டளவில் சமய ஒப்பீடு என்ற பாடத்தில் றோயல் கல்லூரியில் பலருடன் போட்டி போட்டு பரிசு பெற்றவன். அப்பொழுதிருந்தே எனது வாழ்க்கையைச் சமயங்கள் வழிநடத்தி வந்துள்ளன. பல்சமய ஞானிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.


சமயங்கள் அனைத்தும் அன்பையும், கருணையையும், புரிந்துணர்வையும், கொடையையும், சகோதரத்துவத்தையுமே வலியுறுத்துகின்றன. இதனால் நான் எவருடனும் பழகும் போது அன்புடனும் பண்புடனுந்தான் பழகுகின்றேன். நீங்கள் வன்மமுடனும் வேற்றுமையுடனும் வெறுப்புடனும் நடந்துகொள்வது போல் என்னால் நடக்க முடியாதிருக்கின்றது.


மற்றவர்கள் கூறும் கருத்துக்கள், அவர்களின் செய்கைகள், கொள்கைகள் எனக்குப் பொருந்தாதனவாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்களை எனது எதிரிகளாக நான் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவர்களின் கொள்கைகளுக்கு நான் எதிர். அவர்களின் சிந்தனைகளுக்கு நான் எதிர்.


ஆனாலும் அவர்கள் என் சகோதர சகோதரிகளே. கருத்து முரண்படலாம். அதற்காகக் கர்த்தாவை வெறுக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தையைப் பாருங்கள். சில நேரங்களில் அவர்கள் அடம்பிடிப்பார்கள். ஆனால் நாங்கள் அவர்களைத் தேற்றி கூடுமான வரை புரிய வைத்து அவர்களை சமாதானப்படுத்துகின்றோம்.


எனினும் சிலர் குழந்தைகளை வைவார்கள், அடிப்பார்கள். ஆனால் குழந்தைகள் மேலுள்ள அன்பு அதனால் குறைவதில்லை. சமய ஞானிகள்; என் சிந்தனையை மாற்றிவிட்டுள்ளனர். 'கர்த்தாவை நேசி. கருத்தில் முரண்பட்டுக்கொள்' என்கின்றது சமயங்கள்.


ஆகவே ஜனாதிபதியுடன் சிரித்துப் பேசும் போது எம் இருவரினதும் மனிதம் அங்கு வெளிப்படுகிறது. நாங்கள் அன்புடன் அளவளாவுவதினால் சில சமயங்களில் அவர்கள் தங்களுக்கு அரசியல் ரீதியாக இருக்கும் பிரச்சினைகளைக்கூட எங்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்கள்.


நாங்கள் - அவர்கள்' என்ற இருமையில் சிறைபட்டு வாழ்பவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் கருத்து வித்தியாசங்கள் இருப்பவர்கள் கூட சிரித்துப் பேசி முடிவுகளுக்கு வரலாம் என்பதே. எங்கள் கொள்கைகளில் பற்றுறுதி இருந்தால் இது சாத்தியமாகும்.


எமது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து உடையவர் எமக்கு எதிரி என்றோ துரோகி என்றோ கருதும் காலம் தற்போது மலையேறி விட்டது. சுயநல காரணங்களுக்காக அந்தக் கருத்து மேலோங்கியிருந்தது. அதனை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.


3. சிங்களவருடன் சுமூகமாகப் பேசுபவர் எவ்வாறு தீவிரமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்?


சிங்கள மக்களுடன் சுமூகமாகப் பேசும் ஒருவர் அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூற முடியாதா? என் சிந்தனைகள் தீவிரமானவை என்று யார் சொன்னது? எம்முடைய சில அரசியல்வாதிகள் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடமிருந்து தனிப்பட்ட நன்மைகளைப் பெறத் தாம் கூறுபவையே நியாயமான கருத்துக்கள் என்று பெரும்பான்மையினரின் கருத்துக்களுக்கு ஒத்த விதத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.


தாம் கூறுவது நியாயமானதென்று அவர்கள் நினைப்பதால் அவற்றிற்கு அப்பால் பேசுபவர்கள் யாவருந் தீவிரப் போக்குடையவர்கள் என்று கூறி வருகின்றார்கள். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். தாம் மக்களிடம் இருந்து பெற்ற ஆணை என்ன என்பதை மறந்தே பெரும்பான்மையினருக்கு இசைவான கருத்துக்களை நியாயமான கருத்துக்கள் என்று கூறி வருகின்றார்கள்.


ஆனால் அதில் விசித்திரம் என்னவென்றால் மக்களிடம் மீண்டும் ஒருமுறை வாக்குக் கேட்கச் செல்கையில் தாம் முன்னர் குறிப்பிட்ட அதே 'தீவிரமான' கருத்துக்களையே மேலும்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு