மீள்குடியேற்றப்பட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது - யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்

ஆசிரியர் - Admin
மீள்குடியேற்றப்பட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது - யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்

இன்று(6) பருத்தித்துறை-பொன்னாலை வீதி திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது உரையில்

ஏற்கனவே இவ்வீதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு சில காலதாமதங்கள் ஏற்பட்டு நடைபெறுகின்றது.

இப்போது இராணுவத்தளபதியாக இருக்கும் மகேஸ் சேனநாயக்க முன்னர் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக இருக்கும் போது இவ்வீதியை திறப்பது சம்பந்தமாக எம்முடன் கதைத்திருந்தார்.

அந்தவகையில் தற்போது இராணுவத்தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாச்சி அவர்களும் இந்த பாதையை திறப்பதற்கு மிகவும் ஆர்வமாக செயற்பட்டிருந்தார். இந்நிலையில் மகேஸ் சேனநாயக்க மற்றும் தர்ஷன ஹெட்டியாச்சி ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நேற்று மாலை கூட யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி என்னுடன் தொலைபேசியில் கதைத்திருந்தார் ஆரம்பத்தில் போக்குவரத்து சபை பஸ் சேவையை நடைபெறும் பின்னர் படிப்படியமாக மக்களின் தனிப்போக்குவரத்தினை ஏற்படுத்துவோம் என பேசினார். இந்தவகையில் போக்குவரத்துக்காக திறக்கப்படுவது வரவேற்கத் தக்கதொன்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீள்குடியேற்ற சங்கத்தினரும் எம்மைச் சந்திக்கம் போது முதலில் பலாலியில் மீள்குடியேற்றம் செய்தவர்கள் இங்கு வருவதற்கும் இந்தப் பகுதியில் மீள்குடியேற்றம் அங்கு பயணம் செய்வதற்கு இவ் வீதி திறக்கப்பட வேண்டிய தேவையென்றும் இந்த கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கை இன்று நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு