சிறீதரனுக்கு அரசியல் வாழ்வு கொடுத்தது ஈபிஆர்எல்எவ்! மற்றொரு ஆதாரம்!!

ஆசிரியர் - Editor II
சிறீதரனுக்கு அரசியல் வாழ்வு கொடுத்தது ஈபிஆர்எல்எவ்! மற்றொரு ஆதாரம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக்கட்சி ஊடாகவோ? அல்லது ஈபிஆர்எல்எவ் ஊடாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரவேசித்தார் என்கிற சர்ச்சை வலுவடைந்துள்ள நிலையில் 2010 ஆம் ஆண்டு ஆசனப் பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2010 தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எவ் மட்டுமே அங்கம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் பன்னிருவர் கொண்ட யாழ்.மாவட்ட வேட்பாளர் பங்கீட்டில் தமிழரசுக்கட்சி ஏழுபேரை தமது கட்சி ஊடாகவும் மற்றைய ஐவரையும் ஈபிஆர்எல்எவ் மற்றும் ரெலோ கட்சிகள் ஊடாகவும் பகிர்ந்துள்ளமை குறித்த பெயர் ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன.
இதன் அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில்,

மாவை சோ. சேனாதிராஜா, சூசைப்பிள்ளை குலநாயகம், சி.வி.கே.சிவஞானம் (தமிழ் காங்கிரஸ்), ஈ.சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி (தமிழ் காங்கிரஸ்), க.அருந்தவபாலன் மற்றும் இ.சிவச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் போட்டியிட்ட அதேவேளை
ரெலோ கட்சி சார்பில் மு.றெமீடியஸ், ஆறுமுகம் நடேசு இராசரத்தினம் ஆகிய இருவருமே போட்டியிட்டிருந்தனர். அந்தக் காலப் பகுதியில் ரெலோவில் இருந்து சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகியோர் வெளியேறிருந்தமையால் குறைந்த அளவினா வாய்ப்பே ரெலோவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் ஈபிஆர்எல்எவ் கட்சி சார்பில் மூவருக்கு வாய்ப்பு வளங்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஸ் பிறேமச்சந்திரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கே போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன என்று உள்வீட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈபிஆர்எல்எவ் ஊடாகவே அரசியலில் களமிறங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு