SuperTopAds

ஈரானில் நிலநடுக்கம்!!

ஆசிரியர் - Editor III
ஈரானில் நிலநடுக்கம்!!

ஈரானில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.

ஈரானின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம், ஈரானின் தெற்கு பகுதியான  பந்தர் காமர் பகுதியிலிருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

2017 ஆம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் ரிக்டர் அளவில் 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.