SuperTopAds

சுகாதார அமைச்சு அதிகாாிகளை சந்திக்கிறது தோ்தல் ஆணைக்குழு..! பாதிப்பு மேலும் அதிகாிக்குமானால் தோ்தல் ஒத்திவைக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
சுகாதார அமைச்சு அதிகாாிகளை சந்திக்கிறது தோ்தல் ஆணைக்குழு..! பாதிப்பு மேலும் அதிகாிக்குமானால் தோ்தல் ஒத்திவைக்கப்படும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகாித்திருக்கிறது. இந்நிலமையின் தாற்பாியத்தை அறிந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சு அதிகாாிகளை தோ்தல் ஆணைக்குழு நாளை சந்திக்கவுள்ளது. 

இந்நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை அதிகாிக்கும் அல்லது பாதிப்பு வலுவாகும் என சுகாதார அமைச்சு அதிகாாிகள் கூறினால் நாடாளுமன்ற தோ்தல் ஒத்திவைக்கப்படும்.

இதனை தோ்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளா் நாயகம் சமன் ரத்நாயக்க கூறியுள்ளாா். இந்த விடயம் குறித்து மேலும் அவா் கூறுகையில், நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலமை ஏற்பட்டால், 

செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விவாதிக்க வரும் வாரங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நெருக்கமாக செயல்படும். 

சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் ஆலோசனைப் படி தேர்தல் பரப்புரைகள் எவ்வாறு இடம்பெறவேண்டும் என்ற வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவேண்டி வரும்.

அரசியல் கட்சிகள் இணையத்தில் தமது பரப்புரைகளை முன்னெடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எப்போதும் எதிரானதாகவே உள்ளது. 

அத்துடன், மக்கள் பேரணி மூலம் பணம் மற்றும் நேரம் வீணடிக்கப்படுவதை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளாது. எனினும் வீடு வீடாக பரப்புரைகள் நடைபெற வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். 

ஆனால் தற்போதைய சுகாதார அச்சத்தைக் கருத்தில் கொண்டு, குழுக்களாக வீடுகளுக்குச் செல்ல மக்கள் அனுமதிக்க விரும்புகிறார்களா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். 

தேர்தலை ஒத்திவைக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரவில்லை என்றார்.