இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்களும் இல்லை. காணாமல்போனவர்களும் இல்லை -ஜனாதிபதி கூறுகிறார்-

ஆசிரியர் - Editor I
இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்களும் இல்லை. காணாமல்போனவர்களும் இல்லை -ஜனாதிபதி கூறுகிறார்-

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இலங்கையில் படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பா ட்டில் உள்ள இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக காணாமல் ஆக்க ப்பட்டவர்களின் உறவினர்கள் என்னிடம் வடகிலும் கூறினார்கள், தெற்கிலும் கூறினார்கள்.

அவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொண்டு நான் இரகசிய முகாம்கள் எதாவது இருக்கிறதா? அங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்களா? என தேடினேன். ஆ னால் இங்கே இரகசிய தடுப்பு முகாம்களும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இல் லை.

மேற்கண்வாறு இன்றைய தினம் சிறீலங்கா சுதந்திரகட்சி சார்பில் உள்ளுராட்சி சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எ ன்னை வடக்கிலும் சந்தித்தார்கள், தெற்கிலும் சந்தித்தார்கள். அவர்கள் அப்போது கூறியது தமது உறவினர்கள் இலங்கையில் படையினர் மற்றும் பொலிஸாருடைய

கட்டுப்பாட்டில் உள்ள இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக. அவர்களு டைய கருத்துதை ஆமோதித்து நான் தேடினேன். ஆனால் இங்கே இரகசிய தடுப்புமுகா ம்களும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இல்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால் அவர்கள் எங் கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதேபோல் போர் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களிள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் உள்ளார்கள். ஒரு அரசாங்கம் என்ற வகையில்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீட்டை வழங்கலாம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு