இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 1வது கொரோனா நோயாளியின் குடும்பம் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு பிாிவில்..!
இலங்கையில் 1வது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டிருக்கும் நிலையில் அவரு டைய குடும்பத்தை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சு கூறியிருக்கின்றது.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் நேற்று பிற்பகல் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.
2 வயதையுடைய அவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டுள்ளார். இத்தாலி நாட்டு சுற்றுலாக்குழுவுடன் அவர் வழியாட்டியாக இணைந்து செயற்பட்டுள்ளதுடன் தற்போது நோயாளி நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உற்படுத்தப்பட்டிருக்கிறார்.
அவருக்கு அவசியமான சிகிச்சைகளை ஆரம்பித்துள்ளன. அத்துடன், அவரது குடும்பத்தினரை அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர் அனில் ஜாசிங்ஹ மேலும் குறிப்பிட்டார்.