யாழ். காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி

ஆசிரியர் - Editor II
யாழ். காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கு இந்திய அரசு இம்முறை தனது வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்கென எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, எமது மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் நேரடியாக காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்வதன் மூலம், எமது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

என்பதுடன், எமது நாட்டில் தென்பகுதிக்கான பாரிய சந்தைவாய்ப்பினையும் எமது மண்ணில் உருவாக்கிட முடியும்.

இதன் மூலமாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதுடன், எமது வர்த்தக சமூகத்தினர் வருமானமும் அதிகரிக்கும். இந்த திட்டமானது எனது நீண்ட நாள் கனவாக இருக்கின்றது.

அந்த வகையில், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்த காலத்தில், நான் இந்தியா சென்றிருந்தபோது, எனது கோரிக்கையை ஏற்று இந்திய அரசு காங்கேசன்துறை துறைமுகத்தை அகழ்ந்து, அப்பகுதியினுள் இருந்த கழிவுகளை அகற்றி, சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

பின்னர், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் எம்மால் இத்துறைமுகம் தொடர்பிலான மேலதிக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க இயலாது போய்விட்டது.

இந்த நிலையில், இந்திய அரசு மேற்படி துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கு எடுத்திருக்கும் முயற்சியானது எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

ஏற்கனவே, இந்திய அரசானது எனது கோரிக்கையினை ஏற்று 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை வழங்கியதோடு மட்டுமல்லாது, எனது அமைச்சின் கீழிருந்த வடகடல் நிறுவனத்திற்கு புதிய இயந்திரங்களையம், முலப் பொருட்களுக்கான முதலீடுகளையும் வழங்கியிருந்தது என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு