நான் பருந்து..! பொலனறுவை என் கூடு, அங்கு எவரும் முட்டையிட முடியாது. என கூறிய மைத்திரி.. கடுப்பான மஹிந்த..
இலங்கையின் முன்னாள் ஐனாதிபதி மைத்திரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடாது. அவர் தேசிய பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவிப்பது என்றும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த சில கருத்துக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தவறான செய்தியை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் கருத்து வெளியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன, தாம் பருந்து போல தாக்கப் போவதாக தெரிவித்திருந்தார். பின்னர், பொலன்னறுவை தமது கூடு என்றும்
அதில் வேறெவரும் வந்து முட்டையிட விடமாட்டேன் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கள் மஹிந்த ராஜபக்ச தரப்பை கோபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனையடுத்து முன்னைய அரசாங்கத்தின் ஜனாதிபதியும், பிரதமரும் பருந்துபோல தாக்கி கொண்டமை காரணமாக மக்களே பாதிக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ச தமது கருத்தை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.