ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்தது வட மாகாண கல்வி அமைச்சு! நடந்தது என்ன_!

ஆசிரியர் - Admin
ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்தது வட மாகாண கல்வி அமைச்சு! நடந்தது என்ன_!

வடமாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஓய்வறைகளில் மட்டுமே அலைபேசியைப் பயன்படுத்த முடியும் எனவும் மாணவர்கள் முன்னிலையிலோ அல்லது வகுப்பறைகளிலோ பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், வட மாகாண கல்வி அமைச்சு, பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது.

இது குறித்து, வடமாகாண கல்வி அமைச்சு, பாடசாலைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பாடசாலைகளில், ஆசிரியர்களின் அலைபேசி பாவனையால் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. 

ஆசிரியர்கள், வகுப்பறை மாணவர்கள் முன்னிலையில் அலைபேசியில் உரையாடுவதை, மாணவர்கள் அவதானித்து வருகின்றனர். இதன்மூலம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் தனிப்பட்ட நடத்தை வெளிப்படுகின்றது. அத்துடன், மாணவர்களும் இதனைப் பின்பற்ற முற்படுகின்றனர்.

ஆசிரியர்கள், வகுப்பறைப் பாட நேரத்தில் அலைபேசி உரையாடலில் ஈடுபடுவதன் மூலம், கற்பித்தல் நேரத்தின் பெரும்பகுதி, அலைபேசி உரையாடலில் முடிவடைவதால், மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடு பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கற்றலில் கவனம் செலுத்தும் செயற்பாடு, அலைபேசி உரையாடலால் திசைமாறிச் செல்கின்றது. 

ஆகவே, ஆசிரியர்கள் அலைபேசியை அவசியம் பயன்படுத்த வேண்டியிருப்பின், ஓய்வறையில் வகுப்பறை பாடநேரம் தவிர்ந்த நேரங்களில் பயன்படுத்தலாம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு