ஒன்ராறியோவில் இதுவரை 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
கனடா - ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய,ஏழாவது நோயாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் 60வயதான கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் தற்போது ரொறன்ரோவில் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு லேசான இருமல் மற்றும் காய்ச்சல் மட்டுமே அவரது ஒரே அறிகுறிகள் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும், அவரை நகரத்தின் உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, ஈரானில் இருந்து திரும்பிய ஒன்பது நாட்களுக்குப் பிறகு, அந்த நபரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒன்ராறியோவில் இதுவரை 7 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஈரான், தென்கொரியா, இத்தாலியில் இருந்து திரும்பியவர்களாவர்.