அமெரிக்க படையினர் மதுபானம் பயன்படுத்த தடை!
ஜப்பானின் ஒஹினாவா தீவில் பணியாற்றும் அமெரிக்க படையினர் மதுபானத்தை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க படைவீரர் ஒருவர் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி பாரிய விபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானப் படைத் தளம் மற்றும் வதிவிடயங்களில் இருந்து வெளியேறுவதற்கு அமெரிக்க படைவீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க படைவீரர் செலுத்திய வாகனம், சிற்றுந்து ஒன்றுடன் மோதியதில் அதன் சாரதி உயிரிழந்திருந்தார்.
ஜப்பானிலுள்ள அரைவாசிக்கும் அதிகமான அமெரிக்க படைவீரர்கள் ஒஹினாவா தீவிலேயே உள்ளதுடன், அதிகளவிலான படையினரின் பிரசன்னத்திற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.