இந்தோனேஷியாவில் மீண்டும் நில நடுக்கம்!!
இந்தோனேஷிய நாட்டில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சயூம்லாகி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நடுக்கமானது 157 கிலோமீட்டர் ஆழத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் எந்த உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.