தமிழ் இனத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்கு நிகரானவரா? இரா.சம்மந்தன்.

ஆசிரியர் - Editor I
தமிழ் இனத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்கு நிகரானவரா? இரா.சம்மந்தன்.

தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காக போராடிய தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்கு ஒப்பா ன தலைவராக இலங்கையின் எதிர்கட்சி தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனை தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சித்தரித்து வரு கின்றமை மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழ்தேசிய இனத்தின் விடுதலைக்காக உண்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட உலக மக்க ளால் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன். ஆயுத போராட்டத்திற்கு சமமாக அரசியல் இயக்கம் இருக்கவேண்டும் என்னும் சிந்தனையில் தேசிய தலை வர் மேதகு வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்தேசிய கூட்டமைப்பு.

2009ம் ஆண்டு தமிழீழ விடுதலை போராட்டம் நிறைவுக்கு வந்த பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணாகவே செயற்பாடுகள் அமைந்துள்ளது. பௌத்தத்திற்கு முதலு ரிமை, ஒற்றையாட்சிக்கு இணக்கம், வடகிழக்கு தமிழர் தாயக கோட்பாடு நிராகரிப்பு, தமிழர்களின் அடிப் படை உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலமைகளில் அவதானமின்மை 

போன்ற பல்வேறு முரணான செயற்பாடுகளால் தமிழ்தேசிய கூட்டமைப்பு சமகாலத்தில் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் உள்@ராட்சி சபை தேர்தலில் பே hட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலரும், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலரும் தேசிய தலைவர் மே தகு வே.பிரபாகரனுக்கு நிகரானவராக இரா.சம்மந்தனை சமூக வலைத்தளங்களில் சித்தரித்து வருகின்றனர். இதனால் மக்கள் மேலும் ஆத்திரமடைந்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு