யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு

ஆசிரியர் - Admin
யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் முயற்சியினால் மீள் குடியேற்றத்துக்கான விஷேட செயலணி ஊடாக 1200 மீட்டர் நீளம் கொண்ட குறித்த வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

சுமார் 48 லட்சம் ரூபா செலவில் அமைச்சரின் மீள் குடியேற்ற இணைப்பாளர் பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வீதியுடன் வடக்கு செயலணி நிதி ஒதுக்கீட்டில் 24 வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதி அமைச்சர் அமீரலி ஆகியோர் வருகை தந்ததுடன் குறித்த வீதிகளை புனரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு