6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் கொள்ளை!!
ஜப்பான் செஞ்சிலுவை சங்க வைத்திய சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகள் திருட்டு போனது குறித்து போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துறைமுக நகரமான கோபேயில் உள்ள ஜப்பான் செஞ்சிலுவை சங்க வைத்திய சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகள் திருட்டு போயின. அங்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்த அட்டைப்பெட்டிகளில் கொரோனா வைரஸ் முகமூடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் 4 பெட்டிகளில் இருந்த முகமூடிகளை காணவில்லை. அவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் முகமூடி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி திருடப்பட்ட முகமூடிகளை கூடுதல் விலைக்கு விற்க அவை திருடப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.