2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!!
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2004 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது.
நேற்று மட்டும் அங்கு 132 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த ஆணையளம் மேலும் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக 74 ஆயிரத்து 185 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 1749 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 236 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 11 ஆயிரத்து 977 பேர் மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனா முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று 1824 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.