உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆசீர்வாதத்துடன் தீவகத்தில் மீண்டும் மண், மாடு திருட்டுக்கள்.

ஆசிரியர் - Editor I
உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆசீர்வாதத்துடன் தீவகத்தில் மீண்டும் மண், மாடு திருட்டுக்கள்.

தீவகப் பகுதிகளில் சிறிது காலம் கட்டுக்குள் இருந்த மண் மற்றும் கால்நடைத் திருட்டுக்கள் மீண்டும் அதிவேகத்தில் நடைபெற்று வருவதாக தீவக பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் இந்தத் திருட்டுக்கள் இடம்பெறுவதால் கீழ் மட்டத்தில் உள்ள உள்ளுர் பொலிஸார் இவற்றைத் தடுக்க முடியாது கையறு நிலையில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மண்கும்பான் பகுதியில் இருந்து தினமும் பெருமளவு மணல் திருடப்பட்டு பொலிஸ் காவலரண்களைத் தாண்டி பகிரஙக்கமாகக் கடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த 28 ஆம் திகதி புதன்கிழமை இரவும் மண்கும்பாண் நீர்வழங்கல் திட்டத்துக்கு அருகில் பாரிய வாகனங்கள் கொண்டு பெருமளவு மணல் அகழ்ந்து கடத்தச் செல்லப்பட்டுள்ளதாக தீவக சிவில் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு மட்டும் 12 கனரக வாகனங்களில் பெருந்தொகை மணல் அகழந்து கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேபோன்று வேலணை, ஊர்காவற்றுறை உள்ளிட்ட தீவகத்தின் பல்வேறு பகுதிகளில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் திருடி கடத்தப்பட்டு வருகதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மணல் மற்றும் கால்நடை கடத்தல்கள் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை.

சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் இவ்வாறான கடத்தல்களைத் தடுக்குமாறு பொலிஸாரிடம் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எனினும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தீவக சிவில் சமூகத்தினர் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு