கொரோனா வைரஸ்: 1600 உயிரிழப்பு!!

ஆசிரியர் - Editor III
கொரோனா வைரஸ்: 1600 உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எணிக்கை 1600 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சீனாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 139 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும் ஹூபேயில் கோவிட் -19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 1,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 ஆயிரம் பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த வைரஸ் 28 நாடுகளில் பரவியுள்ளதுடன் ஆசியாவை தாண்டி நேற்று ஐரோப்பாவில் முதல் மரணம் சம்பவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு