நெடுங்கேணியில் அதிரடிப்படையினர் அதிரடி முற்றுகை..! தமிழர் நிலத்தில் குடியேறியவர்களின் கஞ்சா தோட்டம் அழிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor
நெடுங்கேணியில் அதிரடிப்படையினர் அதிரடி முற்றுகை..! தமிழர் நிலத்தில் குடியேறியவர்களின் கஞ்சா தோட்டம் அழிக்கப்பட்டது..

நெடுங்கேணி காட்டு பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் நேற்று முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை கைப்பற்றியிருக்கின்றனர். 

சுமார் அரை ஏக்கர் அளவிலான நிலத்தில் குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து சென்ற விசேட அதிரடிப்படையினரே குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளை போகஸ்வௌ 

பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் போகஸ்வௌ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் 

தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio
×