நட்டஈடு கோரும் மாவை: ராஜதந்திரமென்கிறார் செல்வம்!

ஆசிரியர் - Admin
நட்டஈடு கோரும் மாவை: ராஜதந்திரமென்கிறார் செல்வம்!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் தலா இரண்டு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றில் வைத்து கூறியிருந்தார்.

சிவசக்தி ஆனந்தன் பல முறை வெளியிட்டுள்ள இந்த கருத்து காரணமாக மக்களுக்காக பல தசாப்தங்களாக அர்ப்பணிப்பு சேவையாற்றி வந்த மாவை சேனாதிராஜாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி அனுப்பியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் தனது தரப்பு வாதிக்கு ஏற்பட்ட அவப்பெயருக்கு இழப்பீடாக ஒரு பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்தரணி, சிவசக்தி ஆனந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே அரசாங்கத்திற்கான கூட்டமைப்பின் ஆதரவானது ஒரு இராஜதந்திரமே தவிர, அதனை அரசாங்கத்திடம் சோரம் போவதாக கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இறைமை, உரிமை, விடுதலை என்பன சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது சுமத்தப்பட்டது. நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பல விட்டுக் கொடுப்புகளை செய்துள்ளோம். 

ஆனால் நாம் ஒத்துழைக்கவில்லை என இந்த அரசாங்கமும் தங்களது நியாயப்பாட்டை சொல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கின்ற காலக்கட்டத்தில் இருக்கின்ற காரணத்தினாலேயே சில சந்தர்ப்பங்களில் இந்த அரசாங்கத்திற்கு உதவி வருகின்றோம் என்பதே உண்மை என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு