பௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எம்மை ஆதரியுங்கள்! -மணிவண்ணன்

ஆசிரியர் - Admin
பௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எம்மை ஆதரியுங்கள்! -மணிவண்ணன்

பௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால், எமக்கு ஆதரவு அளியுங்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர வேட்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் கோரியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தலின் பின்னர் வடக்கு, கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.அவரின் இந்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே விசுவலிங்கம் மணிவன்னண்இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ வடக்கு, கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்போவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்கள். வடக்கு, கிழக்கில் சிங்கள மயமாக்கலை முன்னெடுக்க நல்லாட்சி அரசாங்கம் முனைகின்றது.இலங்கையை மாறி மாறி அரசாட்சி செய்யும் அரசாங்கங்கள், மற்றையவர்களை விட தாம் சிங்கள மேலாதிக்கம் உடையவர்கள் என காண்பிப்பதற்கு முட்டி மோதிக்கொண்டிருக்கின்றார்கள்.

இடைக்கால அறிக்கை பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை தெட்டத் தெளிவாக காட்டியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு இணங்கியிருக்கின்றது.பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து வெளிவரவிருக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டுமாக இருந்தால், இடைக்கால அறிக்கையினைப் பரிந்து பேசும் தரப்பினை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்க மாட்டோம். அந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆணை கொடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் விகாரை அமைக்கப்பட வேண்டுமாயின், அந்த உள்ளூராட்சி சபைகளின் அனுமதி பெற்றே அமைக்க வேண்டும். பௌத்த மதகுரு ஒருவரின் உடல் தகனம் செய்யப்படும் போது, தகனம் செய்வதற்குரிய அனுமதி யாழ். மாநகரசபைக்கு இருந்த நிலையில், எந்த அரசியல் கட்சிகளும், பொது இடத்தில் தகனம் செய்வதற்குரிய நிலையில், எந்தக் கட்சியும் குரல் கொடுக்காத நிலையில் நாம் குரல் கொடுத்திருந்தோம்.

பௌத்த மதத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு மௌனமாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபைகளைக் கைப்பற்றுமாக இருந்தால், உடல் பொது இடத்தில் எரிக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருந்த த.தே.கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் பௌத்த மயமாக்கலை கைதட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்.

சிங்கள பௌத்த மதத்திற்கு எதிராக குரல் கொடுக்க முடியும். எமது மண் சிங்கள பௌத்த மயமாக்குவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும். பௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால், எமக்கு ஆதரவு அளியுங்கள். ஒரு போதும் நாம் விகாரைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப் போவதில்லை. பௌத்தர்கள் இன்றி, தமிழ் மக்கள் மட்டும் வாழும் பூமியில் சிங்கள பௌத்த மதத்திற்கு எதிராக போராடக்கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு