யாழ்ப்பாணம்- கொழும்பு விமானசேவை இன்று ஆரம்பம்..! நேர அட்டவணை, கட்டண விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- கொழும்பு விமானசேவை இன்று ஆரம்பம்..! நேர அட்டவணை, கட்டண விபரம் வெளியானது..

யாழ்ப்பாணம்- கொழும்பு விமான சேவை  இன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

FitsAir விமான சேவை  யாழ்ப்பாணம் விமான நிலையம்-  இரத்மலானை விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளது

இதன்படி  திங்கள், புதன், சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

 கொழும்பிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்திற்கு காலை 8.20 மணிக்கு வந்தடைகிறது.  

யாழ்ப்பாணத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் விமானம் கொழும்புக்கு காலை 10.20  மணிக்கு சென்றடையும்.  ஒரு வழி பயணச்சீட்டு கட்டணமாக  7500 ரூபா அறிவிடப்படவுள்ளது. 

 அனுமதிக்கப்படும் பொதிகளின் அளவு.

கட்டணமின்றி  7 கிலோ கிராம் 20 கிலோ வரையும் 750 ரூபா செலுத்தி பொதிகளை கொண்டு செல்லலாம்

மேலதிக ஒரு கிலோ கிராமுக்கு ரூபா 100 வீதம் அறிவிடப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு