வேலணை பிரதேசம் பின்தங்கிச் செல்ல சரியான நிர்வாகம் இன்மையே காரணம். கட்சி அலுவலக திறப்பு விழாவில் எஸ்.விஜயகாந் அவர்கள் தெரிவிப்பு …

ஆசிரியர் - Admin
வேலணை பிரதேசம் பின்தங்கிச் செல்ல சரியான நிர்வாகம் இன்மையே காரணம். கட்சி அலுவலக திறப்பு விழாவில் எஸ்.விஜயகாந் அவர்கள் தெரிவிப்பு …

வேலணைப் பிரதேசம் சரியான நிர்வாகத்தின் கீழ் இல்லமையே அதன் அபிவிருத்தி நிலை பின் தங்கிச் செல்கின்றது.

மிகச் சிறந்த சுற்றுல மையமாகக் காணப்படும் இப்பிரதேசத்தை சரியான முறையில் நிர்வகிக்க தகுதியானவர்கள் இல்லை
எனவே உங்கள் பிரதேசத்தை அபிவருத்தி செய்யப் பொருத்தமானவர்களை தெரிவு செய்யுங்கள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளருமான எஸ்.விஜயகாந்.

வேலணையில் 02.02.2018 இன்று கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கப்பட்டது. இதில் கட்சியின் செயலாளர், உறுப்பினர்கள், வேலணைப்பிரதேச வேட்பாளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். இவ் அலுவலகத் திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தமை வருமாறு: அரசியல் தலமைகள் இந்த பிரதேச அபிவிருத்தி தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இருந்த காலத்தில் தீவத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை என்ன செய்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த காலங்களில் யாழ் மாவட்டத்தின் அனைத்து வீதிகளிற்கும் காபெற் போடப்பட்ட போதும் அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை உள்ள வீதி இன்று வரை கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

எனவே சிந்தித்து செயற்படுங்கள். துடிப்புள்ள நேர்மையான மக்கள் நலன் கருதி சேவையாற்றும் எங்களுடைய வேட்பாளர்களை தெரிவு செய்து இப்பிரதேச அபிவிருத்திக்கு உதவுங்கள்.

நாம் ஆட்சி அமைத்தால் வேலணைப் பிரதேச சபையினை பிரதான சுற்றுலா மையமாக உருவாக்கி அதனூடாக வருகின்ற வருமானத்தின் ஊடாகவும் ஏனைய மத்திய மாகாண நிதி ஒதுக்கீடுகள் மூலமாகவும் எமது மக்களுக்கு அன்றாடப் பிரச்சனை தொடக்கம் நீண்ட காலத் தேவைகளையும் இனங்கண்டு சிறந்த சேவையை ஆற்றுவோம் என்றார்.

27072819_2018308678417362_5579737770773648161_n

27658016_2018308705084026_5700464586466150894_n

27331563_2018308728417357_8039212821929219013_n

27336495_2018308755084021_7238150371684086192_n

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு