எலிகளுடன் வாழும் ஆனந்த சங்கரி.

ஆசிரியர் - Editor I
எலிகளுடன் வாழும் ஆனந்த சங்கரி.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2004ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டினை மீள கொடுக்காமல் வைத்திருக்கும் ஆனந்த சங்கரியும், பிரதேச சபை தொடக்கம் மாகாணசபை வரை ஊழலுக்கு பெயர்போன சுரேஸ் பிறேமச்சந்திரனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விரல் நீட்டி குற்றஞ்சாட்டுவதற்கு தகுதியானவர்கள். இவர்கள் அப்பட்டமான பொய்யை சொல்பவர்கள்.

மேற்கண்டவாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். நேற்று யாழ்.இலங்கைவேந்தன் கலை கல்லூரியில் வேட்பாளர்கள் மற்றும் மக்களுடனான கலந்துரையாடலும், சந்திப்பும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஆனந்த சங்கரிக்கு2004ஆம் ஆண்டு பதவி பறிபோனது.

ஆனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கொழும்பில் வழங்கப்பட்ட பங்களாவை அரசாங்கத்திடம் மீள கையளிக்கவில்லை. இப்போதும் அதை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். நான் ஒரு தடவை அங்கே போனேன். அவருடைய வீட்டில் எலிகள் தான் அதிகமாக வாழ்கின்றன. இப்படிபட்ட ஆனந்த சங்கரி தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நோக்கி விரல் நீட்டி பேசலாமா? மற்றவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் இவர் பிரதேச சபைகளில் தொடங்கி மாகாணசபை வரை ஊழலுக்கு பெயர்போன ஒருவர்.

மக்களுக்கு தெரியும் வலி,கிழக்கு பிரதேச சபையையும், வல்வெட்டித்துறை பிரதேச சபையையும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் எதற்காக கலைத்தார்? அங்கே சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினருக்கு தலைவர் பதவிகள் கொடுக்கப்பட்டு அவர்கள் அங்கே ஊழல் செய்தார்கள்.

இதேபோல் வடமாகாணசபையில் 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். அங்கே ஒரு அமைச்சர் மீது மட்டுமே ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. மற்றவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை. அந்த அமைச்சர் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு தேர்வான அமைச்சரானவர். அப்படிப்பட்ட ஊழலுக்கு பெயர் போனவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நோக்கி விரல் நீட்டி பேசுவதற்கு கிஞ்சித்தும் தகுதியற்றவர்கள்.

இதேபோல் சுரேஸ் பிறேமச்சந்திரன் சொன்னார் கொழும்பில் எனக்கு பங்களா வழங்கப்பட்டுள்ளதாம். அதற்கு அவர் ஒரு விலாசமும் சொன்னார். அந்த விலாசத்தில் ஒரு ஒழங்கைதான் உள்ளது. அங்கே பங்களா கிடையாது. அதனை நான் புகைப்படம் எடுத்துவந்தேன். என தனது தொலைபேசியில் ஒழுங்கை ஒன்றின் புகைப்படத்தை காண்பித்தார் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு