யாழில் முதி­ய­வரின் உயிரைப் பறித்த பணிஸ்

ஆசிரியர் - Editor II
யாழில் முதி­ய­வரின் உயிரைப் பறித்த பணிஸ்

பணி­ஸும் பிளேன்­ரி­யும் உட்­கொண்ட முதி­ய­வரின் தொண்­டை­யில் அவை சிக்­கி­ய­தால் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்பா­ணம் டேவிட் வீதி­யில் உள்ள அவ­ரது வீட்­டில் நேற்று நடந்தது.இதே இடத்­தைச் சேர்ந்த செலஸ்­ரின் பெஞ்­ச­மின் (வயது-83) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

உணவு உட்­கொண்­ட­போது அவர் மயங்­கி­யுள்­ளார். உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

எனி­னும் அவர் முன்­னரே உயி­ரி­ழந்து விட்­டமை மருத்­துவ பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது. அவர் ஏற்­க­னவே இதய நோய் மற்­றும் சளி என்­ப­ன­வற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்டது.

திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை நடத்­தி­னார். சட­லம் குடும்­பத்­தி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு