அவுஸ்திரேலியா 121 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்!!

ஆசிரியர் - Editor II
அவுஸ்திரேலியா 121 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்!!

அவுஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

இவ்விரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

இதில் நாணய சுழல்ச்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  இதனால் இந்திய அணி பந்து வீசுகிறது.

22 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. 

Radio