புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதா? - ஜனநாயகப் போராளிகள் கட்சியிடம் விசாரணை

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் நடத்தப்படும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு மற்றும் வணக்க நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதங்கள் இசைக்கவிடப்படுகின்றதா என்று பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
புதுகுடியிருப்பு ஜனநாயப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை ஒன்றையும் நடத்தியதாக தெரிவிக்கபடுகின்றது.
ஜனநாயக போராளிகளின் கட்சி அலுவலகத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்றும், நேற்றுமுன்தினமும் நடைபெற்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேனிசை செல்லப்பா உள்ளிட்ட பாடகர்கள் பாடிய இறுவெட்டு ஒன்று அவ்விடத்தில் ஒலிக்கவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று அந்த இடத்திற்குச் சென்ற புதுகுடியிருப்பு பொலிஸார் குறித்த கட்சி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எனினும் குறித்த இறுவெட்டு கடந்த மாதம் உத்தியோகபூர்வமாக முல்லைத்தீவில் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளதை கட்சிக்காரர்கள் பொலிஸாருக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பாடல்களை ஒலிக்கவிடுவிதற்கு பொலிஸார் அனுமதித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.