152 வருடங்களின் பின்னர் இலங்கை வான் பரப்பில் அபூர்வ நிலவு! யாழில் தோன்றிய அழகிய காட்சி

ஆசிரியர் - Admin
152 வருடங்களின் பின்னர் இலங்கை வான் பரப்பில் அபூர்வ நிலவு! யாழில் தோன்றிய அழகிய காட்சி

அண்டவெளியில் 152 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன.

இன்றைய நாளில் முழு சந்திர கிரகணமானது, பிளட் மூன் (Blood Moon), சூப்பர் மூன் (Super Moon), மற்றும் ப்ளூ மூன் (Blue Moon) போன்ற அனைத்து நிகழ்வுகளும் சேர்ந்து ஒரே கிரகணமாக இன்றுக்கு காட்சி கொடுத்துள்ளது.

இது போன்றதொரு வானியல் நிகழ்வு 1866-ம் வருடம் மார்ச் 31-ம் தேதி நிகழ்ந்தது. அதன் பிறகு இன்று தான் நடைபெற்றுள்ளது.

இன்றையதினம் இலங்கையின் வான்பரப்பில் தோன்றிய முழு நிலவு தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நாட்டின் பல பாகங்களில் முழு நிலவு பல்வேறு வடிவங்களில் காட்சி கொடுத்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம் என பல இடங்களில் இந்த அபூர்வ நிகழ்வினை காணும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு