யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பாரிய மர்மபொருள்? வெளிவந்துள்ள புதிய தகவல்

ஆசிரியர் - Editor II
யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பாரிய மர்மபொருள்? வெளிவந்துள்ள புதிய தகவல்

யாழ்ப்பாணம் - தொண்டமானாறு காட்டுப்புலம் கடற்கரைப்பகுதியில் தொடர்ந்தும் திமிங்கிலத்தின் முள்ளந்தண்டின் பாகங்கள் கரையொதுங்கி வருகின்றதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இதேபோன்று திமிங்கிலத்தின் முள்ளந்தண்டின் பாகமொன்று கரையொதுங்கியிருந்த நிலையில் இன்றும் 50 கிலோகிராம் எடைகொண்ட திமிங்கிலத்தின் முள்ளந்தண்டு பாகம் கரையொதுங்கியுள்ளது.

தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் இன்று காலை தொழிலுக்காக கடலுக்குச் சென்ற வேளை கடலில் நீரில் மிதந்து வந்த நிலையில் மீனவர்களால் குறித்த திமிங்கிலத்தின் முள்ளந்தண்டின் சிறிய பாகம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பாகம் 3300 கிலோகிராம் எடை கொண்ட நீலத்திமிங்கிலத்தின் பாகம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த திமிங்கிலமானது கடல் வாழ் உயிரினங்களில் மிகப்பெரியது என்றும் இத்திமிங்கிலம் அண்ணளவாக முன்னூறு ஆண்டுகள் வாழக்கூடியது எனவும் குறிப்பிடப்படுகிறது.

மீட்கப்பட்ட தமிங்கிலத்தின் முள்ளந்தண்டுப்பகுதி கடற்கரையோரத்தில் மக்கள் பாவனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த திமிங்கிலம் 1700 லீற்றர் இரத்தத்தினைக் கொண்ட கடல்வாழ் உயிரினம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட திமிங்கிலத்தின் பாகத்தினை பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருவதோடு, இதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணம் கடற்பகுதில் மர்மான பாரிய பொருள் மிதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

இது இராட்சத மீன் ஒன்றின் உடற் பாகமாக இருக்கலாம் என அந்த பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு