SuperTopAds

உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் நாட்டில் விழுந்து நொருங்கியது..! சுட்டு விழுத்தப்பட்டதா? தீவிர விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் நாட்டில் விழுந்து நொருங்கியது..! சுட்டு விழுத்தப்பட்டதா? தீவிர விசாரணை ஆரம்பம்..

180 பயணிகளுடன் ஈரான் நாட்டிலிருந்து பயணமான உக்ரைன் நாட்டு விமானம் விழுந்து நொருங்கியிருக்கும் நிலையில், விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது விபத்தினால் விழுந்ததா? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த 180 பேரின் நிலை கேள்விகுறி ஆகியுள்ளது.ஈரானில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த விமானம் பதிவிலக்கம் PS752 சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. 

தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

மீட்பு படையினர் விமான விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டு அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது. எத்தனை பேர் காயம் அடைந்தனர். அவர்களின் நிலை என்ன என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. 

அண்மையில் ஈரானின் மிகவும் சக்தி வாய்ந்த படைத்தளபதி சுலைமானியை வான்வழி தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் ஈரானின் 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா தெரிவித்ததற்கு பதிலடியாக 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.1988ம் ஆண்டு ஜூலை மாதம் 

வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானம் (ஈரான் ஏர் 655) அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர். இதை குறித்தே தற்போது 290 என்ற எண்ணை 

அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஹசன் ரவுகானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஹசன் ரவுகானி கூறியதை அடுத்து இந்த விமான விபத்து சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.