புலிகளின் பெயரை வைத்து வடமராட்சியில் நடக்கும் மோதல்

ஆசிரியர் - Editor II
புலிகளின் பெயரை வைத்து வடமராட்சியில் நடக்கும் மோதல்

வடமராட்சியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் ஒருவரால், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக மைதானம் வழங்குவது தொடர்பான இழுபறியே தாக்குதலில் முடிந்துள்ளது.

இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தில் தலைவராக உள்ளவர், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அந்தபகுதியிலுள்ள விளையாட்டு மைதானம், இந்த கழகத்தின் பாவனையில் உள்ளது. விடுதலைப்புலிகளின் காலத்தில் சலாம் விளையாட்டு மைதானம் (மேஜர் சலாம்) என பெயரிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தினர், சிறிலங்கா சுதந்திரக்கட்சி யாழ்ப்பாண எம்.பி அங்கஜன் இராமநாதனை தொடர்பு கொண்டு, சிறிய நிதியுதவி பெற்று, மைதானத்திற்குள் புனரமைப்பு பணியொன்றையும் செய்துள்ளளனர். சி.ரூபாதரன் என்ற அங்கஜனின் ஆதரவாளர் தேர்தலிலும் குதித்துள்ளார்.

இந்தநிலையில், சலாம் விளையாட்டரங்கை தேர்தல் பிரசாரத்திற்காக தருமாறு, அந்த பகுதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. ரூபாதரன் தேர்தலில் போட்டியிடும் நிலையில், வேறு கட்சிகளிற்கு பிரசாரத்திற்கு அனுமதிக்க முடியாதென்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தநிலையில் சில தினங்களிற்கு முன்னர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் நேரில் சென்று மைதானம் வழங்குமாறு இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது ரூபாதரன் குறித்த வேட்பாளரை நெஞ்சில் பிடித்து தள்ளியுள்ளார். இதனால் நிலைகுலைந்த த.தே.ம.முன்னணி வேட்பாளர் கீழே விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, ரூபாதரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தினரின் அராஜக செயற்பாடு பிரதேசத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு