தன்னுடைய நிா்வாண படங்களை விற்பனை செய்து அவுஸ்ரேலிய காட்டு தீ மீட்பு பணிக்கு 7 ஆயிரம் டொலா் நிதி வழங்கிய மொடல் அழகி..!
அமொிக்காவை சோ்ந்த ஹைலன் வாா்ட் என்ற மொடல் அழகி தன் நிா்வாண படங்களை விற்று சுமாா் 7 ஆயிரம் டொலா் பணத்தை அவுஸ்ரேலியா காட்டு தீ மீட்பு பணிக்கு வழங்கியிருக்கும் சம்பவம் தொடா்பாக பாராட்டுக்களும், விமா்சனங்களும் எழுந்துள்ளது.
குறித்த மொடல் அழகிக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 4-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன்.
அதற்காக அவர்கள் $10 அனுப்ப வேண்டும். இந்த தொகை ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். அவருக்கு இரண்டே நாட்களில் 7 லட்சம் டாலர்கள் வசூல் ஆகியுள்ளது. அந்த பணத்தை அவா் காட்டு தீ மீட்பு பணிக்கு
வழங்கியுள்ளதாக கூறியுள்ளாா். அதேவேளையில் வசூல் செய்த பணத்தை கைலன் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பயன்படுத்தாமல் ஏமாற்றுவதாக புகார்களும் எழுந்தன. அதற்கு பதிலளித்த அவர், என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
நான் வசூல் செய்த பணத்தை எனக்காக பயன்படுத்தவில்லை. வேண்டுமென்றால் பணம் அனுப்புபவர்கள் ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்பு நிவாரண நிதிக்கு நேரடியாகவே அனுப்பலாம். அதற்காக ஆதாரத்தை மட்டும் எனக்கு அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கைலன் வார்டின் இன்ஸ்டா பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. புதிய முயற்சி மூலம் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பணம் வசூல் செய்யும் கைலன் வார்ட்டுக்கு சிலர் பாராட்டுகளையும், சிலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.