திருநெல்வேலியில் இன்றிரவு வயோதிபத் தம்பதியருக்கு நேர்ந்த அவலம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆசிரியர் - Admin
திருநெல்வேலியில் இன்றிரவு வயோதிபத் தம்பதியருக்கு நேர்ந்த அவலம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

யாழ். திருநெல்வேலியிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயோதிபத் தம்பதியினரை சிறிய ரக ஹன்ரர் வாகனம் மோதியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்.திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை(30) பிற்பகல்-06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வயோதிபத் தம்பதியினர்  யாழ். திருநெல்வேலியிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்தனர். இதன் போது  யாழ்.திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வேகமாக வந்த சிறிய ஹன்ரர் ரக வாகனத்தைச் செலுத்திய இனம் தெரியாத நபரொருவர் குறித்த வயோதிபத் தம்பதியரை மோதிவிட்டு அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளார்.

வயோதிபத் தம்பதியர் வீதி ஒழுங்குக்கமைய பயணித்த நிலையில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் குறித்த வயோதிபத் தம்பதியினர் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்துள்ளனர்.  இந்நிலையில் வீதியால் பயணித்த பொதுமக்கள் குறித்த வயோதிபத் தம்பதியினரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் மேற்படி சம்பவம் தொடர்பில் கடும் விசனம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளியை ஆய்வு செய்வதன் மூலம் வயோதிபத் தம்பதியினரை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு