யாழில் உல்லாச விடுதியாக இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த வைத்தியசாலை

ஆசிரியர் - Editor II
யாழில் உல்லாச விடுதியாக இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த வைத்தியசாலை

இராணுவத்தினரால் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த யாழ். மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த குறித்த வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் மற்றும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஆகியோரிடம் காணி விடுவிப்பிற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

வலி வடக்கில் இடப்பெயர்வின் போது குறித்த வைத்தியசாலை இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரின் உல்லாச விடுதியாக இயங்கி வந்தது.

இந்த நிலையில் குறித்த காசநோய் வைத்தியசாலையை விடுவிக்குமாறு தொடர்ச்சியான கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு