தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்க்கு எதிராக கட்டளை.

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்க்கு எதிராக கட்டளை.

தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூலால் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ள மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், தேர்தல் ஆi ணக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராகவும், நீதிமன்றை அவ மதித்தும் செயற்படுகிறாரா? என தேர்தல் ஆணைக்குழு விசாரிக்கும்படி கட்டளை பிறப்பித்திருக்கின்றார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி பல பொது அமைப்புக்களுடன் இணைந்து தமிழ்தேசிய மக்கள் பேரவை என்ற பெயரில் உள்@ராட்சி சபை தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் அங்கத்துவம் பெற்றிருக்கும் அi மப்பு ஒன்று மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்@ராட்சி தேர்தல் சட்ட விதிகளை மீறி பிர ச்சாரம் செய்ததாக முன்னாள் வலி,வடக்கு பிரதேச சபை தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் வலி

வடக்கு பிரதேச சபையின் வேட்பாளருமான ச.சுகிர்தன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந் த 11ம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு அவ்வாறு ஆலய சூழல்களை தேர்தல் பிர ச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. என கூறி தோல்தல் ஆ

ணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடாக கொடுத்த முறை ப்பாட்டின் அடிப்படையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் சட்டத்தரணியும், யாழ்.மாநகரசபைக்கான தமி ழ்தேசிய மக்கள் முன்னணியின் தலமை வேட்பாளருமான வி.மணிவண்ணன் மற்றும் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் வலி,வடக்கு பிரதேச சபை தலமை வேட்பாளர் ச.சுகிர்தன் மற்றும் மாவட்டபுரம் கந்தசுவாமி

ஆலயத்தின் பூசகர்கள் இருவர் ஆகியோருடன் முறைப்பாட்டாளர் ரட்ணஜீவன் கூல் ஆகிய 5 பேரை யும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் மேலதிக சாட்சிகள் இருப்பின் நீதிமன்றுக்கு கொண்டுவருமாறு ம் நீதிமன்றம் அழைத்திருந்தது. இதற்கமைய வி.மணிவண்ணன் மற்றும் ச.சுகிர்தன், மாவிட்டபுரம் கந்தசு வாமி ஆலய பூசகர்கள் இருவர் ஆகியோர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். எனினும் முறைப்பா

ட்டாளர் ரட்ணஜீவன் கூல் மன்றில் ஆஜராகி இருக்கவில்லை. இந்நிலையில் இன்றும் பொலிஸார் அந் த பிரச்சார நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை காண்பித்து அங்கே தேர்தல் சட்ட விதி மீறல்க ள் எவையும் நடக்கவில்லை என கூறியிருந்தனர். இதேவேளை முன்னைய முறைப்பாட்டாளர் ச.சுகிர் தனிடமும் மேலதிக சான்றுகள் உள்ளனவா? என நீதிமன்றம் வினவிய நிலையில் அவ்வாறான சான்றுக

ள் இல்லை என கூறினர். இதனையடுத்து வி.மணிவண்ணன் மற்றும் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய பூசகர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கு.குருபரன் மற்றும் சட்டத்தரண சுகாஸ் மற்றும் பல சட்டத் தரணிகள் மேற்படி வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என கேட்டனர். இதற்கமைய மேற்படி வழக் கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் ஒரு கட்சிக்

கு சார்பாகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராகவும் செயற்படுவதாக சட்டத்தரணி கு.குருபரன் மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் சுட்டிக்காட்டியதுடன் கடந்த 15ம் திகதி ரட்ணஜீவன் கூல் கொ ழும்பு ரெலிஹிராப் மற்றும் த ஐலண்ட் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரையில் பொலிஸாருக்கும், தமிழ்தே சிய மக்கள் முன்னணிக்கும், மல்லாகம் நீதிமன்றுக்கும் இடையில் பிக் டீல் உள்ளதாக எழுதியுள்ளார். அ

தேபோல் சட்டத்தரணி மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளி யீட்டில் ஆற்றிய உரை தொடர்பாக உள்@ர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மணிவண்ணன் சார்ந்த கட்சிக்கு வாக்களிக்கவேண்டாம் என்னும் தோரணையில் கூறியுள்ள கருத்து தொடர்பாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், தேர்தல் திணைக்களம் மற்றும் நீதி துறை ஆகியன ஜன

நாயக நாடு ஒன்றின் அடிப்படைகள் அவை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையை சி தைக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள ஒருவர் இப்படி செயற்படலாமா? என கேள்வி எ ழுப்பியதுடன், நீதிமன்றில் வழக்கு உள்ள நிலையில் நீதிமன்றுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும், பொலிஸாருக்குமிடையில் பிக் டீல் உள்ளது என எழுதுவது நீதிமன்றை அவமதிக்கும் செயல் எனவும் சு

ட்டிக்காட்டினர். மேலும் ஊடகங்களில் வெளியான கட்டுரைகளின் பிரதி மற்றும் செய்தியின் பிரதி ஆகி யவற்றை நீதிவானக்கு சமர்பித்தனர். இதனடிப்படையில் மேற்படி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ர ட்ணஜீவன் கூல் முறையாக செயற்படுகிறாரா? என விசாரித்து அறிக்கை சமர்பிக்கும்படி மல்லாகம் நீதி மன்ற நீதிவான் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு