தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தண்ணீா் வழங்கியது யாா்..? யாழ்.மாநகர சபை முதல்வா், ஆணையாளாிடம் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தண்ணீா் வழங்கியது யாா்..? யாழ்.மாநகர சபை முதல்வா், ஆணையாளாிடம் தீவிர விசாரணை..

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தண்ணீா் வழங்கியது யாா்? தண்ணீா் வழங்குவதற்கான அனுமதியை வழங்கியது யாா்? என பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் தீவிர விசாரணைகளில் இறங்கியிருக்கின்றனா். 

கடந்த வருடம் 9ம் மாதம் 26ம் திகதி நல்லுாா் சுற்றாடலில் தியாகி திலீபனின் நினைவு துாபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட நீா்த்தாங்கி மூலம் 

வீதிக்கு தண்ணீா் தெளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த உழவு இயந்திரத்தில் மாநகரசபையின் இலட்சினை காணப்பட்டதாகவும் அது மாநகரசபைக்கு சொந்தமானது எனவும் கூறும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா். 

குறித்த உழவு இயந்திர நீா்த்தாங்கியை வழங்கியது யாா்? யாருடைய அனுமதியின் பெயாில் வழங்கப்பட்டது? என தீவிர விசாரணைகளில் இறங்கியிருக்கின்றனா். 

மேலும் குறித்த விபரத்தை தமக்கு தருமாறு யாழ்.மாநகரசபை ஆணையாளாிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் எழுத்தில் கேட்டிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு