SuperTopAds

தமிழக கரையோரங்களில் 5 நாட்கள் தொடா் தேடுதல்..! இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி பெறுமதியான போதை பொருள்..

ஆசிரியர் - Editor I
தமிழக கரையோரங்களில் 5 நாட்கள் தொடா் தேடுதல்..! இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி பெறுமதியான போதை பொருள்..

கடல்வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான போதை பொருட்களை இந்திய பொலிஸாா் கைப்பற்றியுள்ளதுடன், பல கடத்தல் காரா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

தமிழகம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்கள் தொடா் தீவிர கண்கா ணிப்பு நடவடிக்கையின்போது மிகப்பெருமளவு போதைப் பொருட்கள் மீட்கப்ப ட்டிருப்பதாக இந்திய பொலிஸாா் கூறியுள்ளனா். 

மேலும் இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிற து. இந்தியாவில் ராமநாதபுரம் அடுத்த எஸ்.பி பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கள்ளத் தோணியில் கஞ்சா கடத்த இருப்பதாக 

ராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தேவிபட்டிணம், திருப்பாலக்குடி, எஸ்.பி.பட்டிணம் உள்ளிட்ட வடக்கு கடலோரப்பகுதிகளில் தீவிர சோதணையில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது எஸ்.பி. பட்டிணம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டையை எடுத்து சோதனை செய்த போது அதில் 11 பொதிகளில் 

380 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து கஞ்சாவை மீட்ட சுங்கத்துறை அதிகாரிகள் கஞ்சா பொதிகளை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும்,கஞ்சா வாங்க இலங்கையில் 

இருந்து யாரேனும் கடல் வழியாக தமிழகம் ஊடுருவியுள்ளனரா அல்லது தமிழகத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் கஞ்சாவை படகில் ஏற்றும் போது சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் கஞ்சா பொதிகளை 

கடற்கரையில் விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வரும் நிலையில் இலங்கை நபர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் யாரோனும் காரங்காடு 

பகுதியில் உள்ள சதுப்புநில காடுகளில் மறைந்துள்ளனரா என தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கேரளா கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் 10 கோடி இலங்கை ரூபா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் கடந்த 5 தினங்களுக்குள் மன்னார்வளைகுடர் கடல் பிராந்தியங்கள் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சா மற்றும் பீடி இலைகள் பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேர தீவிர கண்காணிப்பையும் மீறி போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவது பாதுகாப்பு வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.