எதிர்கட்சி தலைவருக்குரிய வாகனம் மற்றும் வீடு இப்போதும் இரா.சம்மந்தனிடம்..! முழிக்கிறார் சஜித்..

ஆசிரியர் - Editor I
எதிர்கட்சி தலைவருக்குரிய வாகனம் மற்றும் வீடு இப்போதும் இரா.சம்மந்தனிடம்..! முழிக்கிறார் சஜித்..

எதிர்கட்சி தலைவராக இருந்தபோது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பெற்றுக் கொண்ட வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றை மீள கையளிக்காத நிலையில், சஜித் பிறேமதாஸவுக்கு எதிர்கட்சி தலைவருக்கான வரப்பிரசாதங்கள் கொடுக்கப்படவில்லை. 

சிங்கள இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த ஆட்சி காலத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.அப்போது KX-2330 மற்றும் KO-6339 ஆகிய இலக்கதகடுகளைக் கொண்ட 

இரண்டு வாகனங்கள் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்தன.மேலும், கொழும்பு 07, மஹாகமசேகர மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் அவருக்கு வழங்கப்பட்டன.

தற்போது புதிய அரசாங்கம் ஆட்சியில் உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும் அறிவிக்கப்படவுள்ளார்.எனினும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்னும் எதிர்க்கட்சி தலைவருக்கான வரப்பிரசாதங்களை 

மீளளிக்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு