டெங்கு காய்ச்சலை தொடர்ந்து தீவிரமடையும் எலிக்காய்ச்சல்..! சுகாதார அமைச்சு எச்சரிக்கை..
இலங்கையில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள மழையுடனான காலநிலை நோய் தொற்றை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.
இதுகுறித்து விசேட கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. எலிக்காய்ச்சல் அதிகளவிலுள்ள அடையாளம காணப்படும் பிரதேசங்களுக்கு இலவசமாக எதிர்ப்பு மருந்துகளை
வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவிக்கிறது.