SuperTopAds

பெண்கள் மீது பாலியல் பலாத்காரம்..! வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 16 வயதான இரு சிறுவா்கள் கைது..

ஆசிரியர் - Editor I
பெண்கள் மீது பாலியல் பலாத்காரம்..! வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 16 வயதான இரு சிறுவா்கள் கைது..

பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த 16 வயதான இரு சிறுவா்களை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது, கடந்த வாரம்டுவிட்டரில் குறிப்பிட்ட வீடியோ வெளியானதை தொடர்ந்து இணையத்தில் சட்டவிரோத பதிவுகள் குறித்து 

கண்காணிக்கும் பிரான்சின்காவல்துறையினர் பொதுமக்களை அந்த வீடியோக்களை பரிமாறவேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன் பின்னர் குறிப்பிட்ட இரு இளைஞர்களும் 

உடனடியாக இணையத்தில் இனம் காணப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்த அதேவேளை மற்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

இவர்கள் இருவரையும் விசாரணை செய்த காவல்துறையினர் பாலியல் வன்முறை மற்றும் சட்டவிரோத பதிவுகளை பரிமாறியமை ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இவர்கள் பதிமன்ம வயதினர் ஆனால் இவர்களை அதற்காக மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ள பிரான்சின் அமைச்சர் ஒருவர் பெண்களைமதிப்பதை அனைத்து வயதினரும் பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளார். 

இவ்வாறான பதிவுகளை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் மேற்கொள்ளவேண்டும் என பிரான்சின் சமத்துவ விவகாரங்களிற்கான 

அமைச்சர் மார்லின் சியாப்பா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கண்டிக்கத்தக்கது எனகுறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான வீடியோக்களை அகற்றுவது குறித்து சமூக ஊடகங்கள்போதிய அக்கறையை வெளிப்படுத்தவில்லை 

என தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்ததும் நான் உடனடியாக டுவிட்டரை தொடர்பு கொண்டேன் நான் தொடர்பு கொண்ட பின்னரும் குறித்த வீடியோக்கள் காணப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.