SuperTopAds

வெள்ளத்தில் மூழ்கிய ஆராத்தியா முறிப்பு..! நோில் சென்று பாா்வையிட்ட ரவிகரன், எல்லை கிராமங்களில் தொடரும் அவலம்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தில் மூழ்கிய ஆராத்தியா முறிப்பு..! நோில் சென்று பாா்வையிட்ட ரவிகரன், எல்லை கிராமங்களில் தொடரும் அவலம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடா்ந்து பெய்துவரும் கன மழைகாரணமாக ஒட்டிசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, களிக்காடு தொடக்கம் ஒட்டிசுட்டான் வரையிலான, ஆராத்தியா முறிப்பு வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனா். 

இந் நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அங்குள்ள நிலமைகளை பார்வையிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த ஒட்டிசுட்டான் தொடக்கம் களிக்காடு வரையிலான ஆரத்தியா முறிப்பு வீதியானது சுமார் 10கிலோ மீற்றர் தூரமான வீதியாகும்.

அத்துடன் மானம்புல்லுகுளம், குஞ்சுக் கோடலிக்கல் குளம், வேப்பங்குளம், அமுதங்குளம், கங்காணியா குளம், அலைசிந்தியா குளம், ஆகிய குளங்களின் கீழுள்ள சுமார் 500ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மற்றும், 

400ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் தோட்டச்செய்கைகளை மேற்கொள்வோரும் பயன்படுத்தும் ஒரு பிரதான வீதியாக, குறித்த ஆரத்தியா முறிப்பு வீதி காணப்படுகின்றது.இருப்பினும் குறித்த வீதியானது சீரின்றிக் கணப்படுவதனால், மழைக்காலங்களில் வெள்ள நீரில் மூழ்குவதாகவும் 

அத்தோடு இவ்வீதியைப் பயன்படுத்துபவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பயிற்செய்கைக்கான உள்ளீடுகளைக் கொண்டு செல்லுதல், அறுவடைகளை எடுத்துச்செல்லுதல், மற்றும் அவசர மருத்துவ சேவைகள் 

போன்ற செயற்பாடுகளுக்கு இவ்வீதியைப் பயன்படுத்தும்போது பலத்த இடர்பாடுகளை தாம் எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம், தாம் எதிர்நோக்கும் குறித்த பிரச்சினைதொடர்பில் 

விவசாயிகள் முறையிட்டனர். குறித்த வீதியின் மறுசீரமைப்புத் தொடர்பில் உரிய கவனஞ்செலுத்துவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களால் விவசாயிகளுக்கு தெரிவிககப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.