வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பம்

ஆசிரியர் - Editor II
வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதென மனித உரிமைகள் கண்காணிப்பகம்குற்றஞ்சாட்டியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சந்தேகநபர்களை தன்னிச்சையாக மாதக்கணக்கில் தடுத்து வைக்கவும், வழக்குத் தாக்கல் இன்றி வருடக்கணக்கில் சிறைவைக்கவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தவும் கடந்த சில தசாப்தங்களாக குறித்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாக பிரட் அடம்ஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கொடூரமான இச்சட்டத்தினை உடனடியாக நீக்குவது அவசியமென அவர் வலிறுத்தியுள்ளார். மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு சட்டத்தை கொண்டுவருவதாக இருந்தால், மனித உரிமைகளை மதிக்கும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக குறித்த சட்டம் அமையப்பெறுவது அவசியம் என்றும் பிரட் அடம்ஸ் குறித்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு