காணாமல்போன இளம் குடும்பஸ்த்தா் 6 நாட்களின் பின் மயானத்தில் சடலமாக மீட்பு..! மன்னாா்- நறுவில்குளத்தில் சம்பவம்..
மன்னாா்- நானாட்டான் நறுவில்குளம் பகுதியில் காணாமல்போன இளம் குடும்ப ஸ்த்தா் ஒருவா் 6 நாட்களின் பின்னா் பொது மயானத்திலிருந்து இன்று காலை சட லமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.
நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த அன்ரனிஸ் நிமல் (வயது-30) என்ற குறித்த குடும்பஸ்தர், கடந்த சனிக்கழமை காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதாகக் கூறிச் சென்றார்.
இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார். முருங்கன் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வந்ததோடு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ச்சியாக அவரைத் தேடி வந்துள்ளனர்.இந்நலையில், வயோதிபர் ஒருவர் பங்குத் தந்தை,
பொலிஸார் மற்றும் கிராம அலுவலகர் ஆகியோருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது காணாமல் போனதாக கூறப்பட்ட தனது கணவரே உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி அடையாளம் காட்டினார். பின்னர் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ இன்று பிற்பகல் 2 மணியளவில்
சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டார். பின்னர் பதில் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
குறித்த நபா் திருமணமாகி 3 மாதங்களேயானவா் என கூறப்படுகிறது.