தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் இருவருக்கு நீதிமன்றால் அழைப்பாணை

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் இருவருக்கு நீதிமன்றால் அழைப்பாணை

தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்களான விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் தாயுமானவர் நிகேதன் ஆகியோரை நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமறு அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது.

மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன், ஆலய பிரதம குரு உள்ளிட்ட மூவர் நாளை செவ்வாய்கிழமை மல்லாகம் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரும் கூட்டமைப்பின் ஆதரவாளரென சில தரப்புக்களால் அடையாளப்படுத்தப்பட்டவருமான ரட்ணஜீவன் கூலிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையில் இணைந்துள்ள தமிழர் சம உரிமை இயக்கத்தின் கொள்கை பரப்பு கூட்டமொன்று மாவிட்டபுரம் ஆலயத்தில் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தமிழரசுக்கட்சி ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்களினை முன்னிறுத்தியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆலய பிரதம குரு நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு கூண்டிலேற்றப்பட்ட நிலையில் அதனை அறிவுறுத்தும் அழைப்பென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் ஆலயக்குரு நீதிமன்ற படியேறவைக்கப்பட்டமை இந்து அமைப்புக்களிடையே கடுமையான சீற்றத்தை ஏற்பட்டியிருந்தது.இந்நிலையில்; அறிவுறுத்தி விடுவிக்கப்பட்ட மதகுரு மீண்டும் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டமை கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

திட்டமிட்ட வகையில் தூண்டுதலில் மீண்டும் இந்து மதகுருவை பழிவாங்கவே மணிவண்ணன் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருக்கலாமெச சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த ரட்ணஜீவன் கூல் ஏற்கனவே இந்து அமைப்புக்களிற்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயற்படும் நபரென அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டமை சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு