தமிழ் மக்கள் மீது தமிழ் கட்சிகளுக்கு அக்கரை இல்லை

ஆசிரியர் - Editor II
தமிழ் மக்கள் மீது தமிழ் கட்சிகளுக்கு அக்கரை இல்லை

தமிழ் கட்சிகள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவதுபோல் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கைரை செலுத்துவதில்லை என கேப்பாப்புலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலையில் அந்த காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் கருத்து வெளியிடுகையில்,

கடந்த 1ஆம் திகதி ஒரு தொகுதி மக்கள் கேப்பாப்புலவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர், ஆனாலும் அவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

மேலும் கேப்பாப்புலவில் உள்ள இராணுவத்தினர் வெளியேர வேண்டும், நாங்கள் அனைவரும் எமது பூர்வீக மண்ணில் மீள்குடியேர வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாங்கள் இன்று 333ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் அரசியற்கட்சிகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கரை செலுத்தவில்லை.

அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவதிலே கவனம் செலுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.<

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு