உடன் நிறுத்துங்கள்! டக்களஸ் தேவானந்தா ஐனாதிபதிக்கு கடிதம்.

ஆசிரியர் - Editor I
உடன் நிறுத்துங்கள்! டக்களஸ் தேவானந்தா ஐனாதிபதிக்கு கடிதம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் கீழ் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்க ள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது. இதனால் தமிழ் மக்கள் அச்சமு ம் கோபமுமடைந்துள்ளனர். அத்தகைய திட்டமேதும் இருப்பின் அரசு அதனை கைவிடவே ண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியை கேட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பியிருக்கும் அவசர கடிதத்திலேயே மேற்கண்டவாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அந்த கடிதத்தில் டக்ளஸ் தேவானந்தா மேலும் கேட்டுள்ளதாவது, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல கட்ட திட்டங்களால் மகாவலி குடியேற்ற பகுதிகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படாத நிலையே காணப்படுகின்றது. 

இதனால் மாகாவலி திட்டம் எனும்போது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே தொடர்ந்தும் சந்தேகக் கண்ணோட்டமே காணப்படுகின்றது. வடக்கில் மணலாறு பகுதியில் மேற்கொள்ள ப்பட்ட குடியேற்றத்திலாவது தமக்கான காணிகள் கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தும், அதிலும் பாரிய ஏமாற்றமே எமது மக்களுக்குக் கிடைத்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில், கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்திருந்த நிலையில், யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களது சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு, பின்னர் அம் மக்கள் மீள்குடியேறிய நிலையில் அவர்களுக்கு வேறு இடங்களில் விவசாய செய்கைக்கு உதவாத சில காணிகளே வழங்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக இம் மக்கள் வாழ்வாதார ரீதியாகத் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையே தொடர்கின்றது. தற்போது மேற்கொள்ளப்படவுள்ள டீ வலது கால்வாய் திட்டமானது கிழக்குமாகாணத்தின், மட்டக்களப்பு பகுதியை உள்ளடக்கும் நிலையில், அங்குள்ள காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

எனவே, ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, தேசிய மகாவலி அபிவிருத்தித் திட்ட குடியேற்றங்களில் தமிழ், முஸ்லிம் மக்களையும் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் நோக்கிய தான மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின்போது, எமது மக்களையே குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதை நான் இங்கு அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். 

அத்துடன், மல்வத்து ஓயா கீழ்ப் பகுதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வவுனியா செட்டிக்குளம் பகுதி வாழ் மக்களது குடிபரம்பல் சிதைக்கப்படாமல் அத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது காணிகள் இல்லாது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழந்து வருகின்ற வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பகுதிகளிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கும் இத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். 

நிலைமை இவ்வாறு இருக்கும்போது, முல்லைத்தீவு மாவட்டத்தினை அடிப்படை யாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற மகாவலி அபிவிருத்தித் திட்டங்களிலும் தமிழ் மக்களே குடியேற்றப்பட வேண்டுமேயொழிய, அங்கு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைப் புகுத்தக் கூடாது. எமது மக்கள் காணி, நிலங்கள் இன்றியும், சொந்தக் காணி, நிலங்களை

படைகளிடம் பறிகொடுத்தும் இருக்கின்ற நிலையில், சிங்களக் குடியேற்றங்களை வலிந்து புகுத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எமது மக்களின் மனங்களைப் புண்படுத்துகின்ற இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு ஒருபோதும் துணை நிற்காது. எனவே, அத்தகைய திட்டங்கள் இருப்பின். அதனை உடனே கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு