எனக்கும் மனோ கணேசனுக்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை

ஆசிரியர் - Admin
எனக்கும் மனோ கணேசனுக்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை

எனக்கும் மனோ கணேசனுக்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை, சஜித் பிரேமதாசவின் வெற்றியை நோக்கியே நாம் பணியாற்றுகின்றோம் என அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறுகல் நிலை தனிப்பட்ட ரீதியிலானது எனவும் அவர் இன்று (08) தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் ரிஷாட்  பதியூதின் ஆகியோரது  ஆதரவாளர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக  தகவல் வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் கேட்டபோது அமைச்சர் ரிஷாட்  பதியூதின் இதனை தெரிவித்ததுடன் தமது தரப்பினருக்கும் அமைச்சர் மனோவின் தரப்பினருக்கும் எந்தவித முறுகல் நிலையும் இல்லை என்று கூறினார்.

ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த முறுகல் இடம்பெற்றிருக்கலாம் என்றும், தான் அமைச்சர் மனோ உள்ளிட்டவர்களுடன் தொடர்ந்தும் சுமூகமாக பணியாற்றுவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை நோக்கியே அனைவரும் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Radio